பதிவர்கள் பத்து பேர்




திடீரென்றுதான் முடிவானது.  நேற்று காலை திடங்கொண்டு போராடு சீனு எனக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னவுடன் தான் தெரிந்தது.  சனிக்கிழமை எனக்கு அலுவலகம் அரை நாள் என்பதால் மாலை நண்பர் ஒருவருடன் பரங்கிமலை செல்வதாக முடிவு செய்திருந்தேன்.  சீனு எனக்கு பதிவர் சந்திப்பு விஷயத்தைச் சொன்னதும் பரங்கிமலை அங்கேயேதான் இருக்கும், இத்தனை பதிவர்களை நேரில் சந்திப்பது அரிது என்று ப.மலை பயணத்தை பரண் மேல் போட்டுவிட்டேன்.



இடமிருந்து வலமாக அரசன், புலவர் ஐயா, நான், ராஜ், சிவா, மதுமதி, பாலகணேஷ்




இடம் தி நகர் புலவர் ராமானுசம் ஐயா அவர்களின் இல்லம்.  நானும் சீனுவும் சேர்ந்து ஒன்றாகவே புறப்பட்டுச்சென்றோம்.  எங்களுக்கு முன்பாகவே மின்னல் வரிகள் பாலகணேஷ், சினிமா சினிமா ராஜ் மற்றும் மெட்ராஸ்பவன் சிவா ஆகியோர் வந்திருந்தனர்.  நாங்கள் சென்றதும் பின்னாலேயே அரசன், மதுமதி ஆகியோர் வந்தனர். சென்னைப் பித்தன் ஐயாவும் ஆரூர் மூனா செந்திலும் வந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.



சென்னையின் நாயகன்




பேச்சினூடே கொறிப்பதற்கு மன்னா ஸ்வீட்ஸ் மிக்சர், சமோசா, பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை புலவர் ஐயாவே ஏற்பாடு செய்திருந்தார்.



தின்பண்டங்களை ஆராய்ச்சி செய்யும் ஜெய்



சென்னைப்பித்தன், ஜெய், சீனு, அரசன்



வெட்கத்தில் ஆரூர் மூனா




திடங்கொண்டு போராடு சாந்தமாக




அடியாள் அரசன்




போட்டோ எடுக்கும் என்னை போட்டோ எடுக்கும் சென்னைப்பித்தன்




குரூப் போட்டோ



என்னது? என்ன பேசினீங்கன்னா?  அதெல்லாம் மூத்த பதிவர்கள் சொல்வார்கள்.  நான் வுடு ஜூட்...